நீல மலைச் சாரலை
வெள்ளி மழை மேகங்கள்
குறையேதும் இல்லாமல்
நுரையோடு குளிப்பாட்ட
ஓராடை அணியாமல்
சுற்றிவரும் மென்காற்று
நீராடை அணிந்து கொண்டு
அங்குமிங்கும் சுற்றிவர
அம் மண்ணும் நாணத்தால்
செம்மண்ணாய் உருமாறி
காற்றடித்த வேகத்தால்
கல்கொண்டு கண் மூட
கள்ளொன்று இருந்தாலும்
ஆடாத பனைமரங்கள்
காற்று வந்த தள்ளியதும்
ஆனந்தக் கூத்தாட
கால் கொண்ட மேகமாய்
சிறகடித்த நாரையும்
தன் மனைவி பேர்சொல்லி
கூடுதேடி பறபறக்க
யானையையே விழுங்கும்
கரும்புத் தோட்டங்கள்
பச்சைப் பசுங்கடலாய்
வெகுதூரம் பரந்திருக்க
ஆள் யாரும் உளரோ என்று
அக்கம்பக்கம் பார்த்துவிட்டு
ஆசைக் காதலியின்
வழவழப்புக் கன்னத்தில்
சற்றேனும் தாமதியாமல்
வாயழுந்த முத்தமிட்டேன் ;
முதல் வரி நீல மலைச் சாரலை என்று தொடங்கும்.....
ReplyDelete