Thursday, September 27, 2012

அம்மானா சும்மாவா ?


எல்லார்க்கும் வணக்கம், 

என் COUSIN தங்கை மதுவந்தியின் முதல் குழந்தைக்கு அதிகாரப் பூர்வமாக நாளை மறு நாள் பெயர் சூட்ட இருக்கிறார்கள். அப்போது என் மடியில் குழந்தை உட்கார்த்தி பெயர் வைக்கப்படும்(தாய்மாமன் அல்லவா ).  குழந்தையின் பெயர் ஹர்ஷவர்தன் . 

அண்மையில் காளமேகம், ஒளவையார் போன்றோரின் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தமையால் அதனால் தாக்குண்டு சிலேடை வடிவில் இந்த நிகழ்வு குறித்து  மூன்று பாடல்களை எழுதியிருக்கிறேன். 

இலக்கணத்தை கடைப்பிடிக்கவில்லை. மனதில் தோன்றியதை உடனே எழுதி விட்டேன் . 


பாடல் 1 : மாமாவுக்கு  அழைப்பு

அம்மாவைப் போலிருக்கும் அம்மாவும் எனை அழைத்து 
தம்மாவைப் பார்ப்பதற்கு இம்மாவைக் கூப்பிட்டாள் 
எம்மாவை மறந்தாலும் அம்மாவைப் பார்ப்பதற்கு
சும்மாவே நில்லாமல் இம்மாவும் ஓடி வந்தான் 

--> 
அம்மாவைப் போலிருக்கும் - அந்த மாங்கனியைப் போலிருக்கும் , அம்மாவும் எனை அழைத்து   - அம்மாவாகியிருக்கும் என் தங்கை எனை அழைத்து ,  தம்மாவைப் பார்ப்பதற்கு -  மாங்கனி போலிருக்கும் தன குழந்தையைப் பார்ப்பதற்கு , இம்மாவைக் கூப்பிட்டாள் - இந்த மாமாவை(தாய்மாமா) கூப்பிட்டாள்.

பாடல் 2 : தாயும் சேயும் 

மதுவிலே பிறந்து மதுவால் வளர்ந்து 
மதுவுக்கே துடித்து மதுவையே நினைத்து 
மது விலக்கிலாமல் மதுவைக் காப்பாய் 
மதுவோடு இருக்கும் மதுவரசே 


--> 
குழந்தையைப் பார்த்துப் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. என் தங்கையின் பெயர் மதுவந்தி என்பதால் மது என்ற பெயர் கொண்டு இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. குழந்தையின் பெயர் ஹர்ஷா என்பதால் அதைத் தமிழில் இங்கு குறிக்க மதுவரசே என்று எழுதியிருக்கிறேன். 

பாடல் 3 : தந்தையும் மகனும் 

நித்தனை மறந்தாலும் நித்தினை மறக்காமல்
நித்தனே நித்தினென்று நித்தினே நித்தனென்று 
நித்தமும் நித்தினை நீங்காமல் நீ நினைப்பாய்  - கடல்
நீத்தம் பார்க்காத நித்திலமே 


--->  நித்தன் என்றால் கடவுள். நித்தின் என்பது என் தங்கை கணவனின் பெயர்.

2 comments:

  1. very good wordings niranjan great work keep blogging

    ReplyDelete
  2. nice. என்ன நிரஞ்சன் ரொம்ப நாளா ஏதும் எழுதுறதில்லை போல?

    ReplyDelete