,
ஒரு பிரதான
சாலை போல்
இருந்தது அந்த
இடம் ;
ஆனால், அதில்
ஓர் அதிசயம் ;
பச்சை, மஞ்சள், சிகப்பு
என பூமாலைகளை
சமிக்ஞை விளக்குகளாய்
வைத்திருந்தனர் மக்கள் ;
வழக்கம் போல்
அதை யாரும்
மதிக்கவே இல்லை,
மிதிக்கவே செய்தனர் ;
காணும் இடமெங்கும்
ஆயிரம் தலைகள் ;
ஆயிரம் தலைகளிடமும்
ஆயிரம் கலைகள் ;
ஆமை போல்
நகர்ந்தனர் சிலர் ;
சிறுத்தை போல்
சீறினர் சிலர் ;
அவரவர் வாயொலிகளை
வைத்தே ஹாரன்களை
எழுப்பினர் பலர் ;
வண்டி அடித்துக்
கொண்டு யாரும் முன்னேறவில்லை
முண்டி அடித்துக்
கொண்டே எல்லாரும் முன்னேறினர் ;
அங்கே
காவல் இல்லாததால்
ஆவல் மிகுந்தது மக்களுக்கு ;
காணக் காண
விழியைப் பிதுங்க
வைத்தது நெரிசல் ;
முன்னால் சென்றவர்கள்
பின்னால் வந்தார்கள் ;
பின்னால் சென்றவர்கள்
முன்னால் வந்தார்கள் ;
இப்படியே
சுழற்சி முறையில்
நடந்தது அந்த
சாலை போக்குவரத்து ;
எனினும் -
எதையுமே அறியாமல்
அங்கே பிணமாகத்
தூங்கிக் கொண்டிருந்தார்
இவை எல்லாவற்றுக்கும்
காரணமான ஒருவர் ;
நன்று நண்பரே..
ReplyDelete//பச்சை, மஞ்சள், சிகப்பு
என பூமாலைகளை
சமிக்ஞை விளக்குகளாய்
வைத்திருந்தனர் மக்கள் ;
வழக்கம் போல்
அதை யாரும்
மதிக்கவே இல்லை,
மிதிக்கவே செய்தனர் ;//
போக்குவரத்து விதிகளின் மீது நமது மக்கள் காட்டும் அலட்சியத்தை சிறப்பாகவே குத்தி காட்டி இருக்கிறீர்கள்..