Sunday, June 10, 2012

ஒன்றும் ஓராயிரமும்



                         ,
ஒரு பிரதான
சாலை போல்
இருந்தது அந்த
இடம் ;

ஆனால், அதில்
ஓர் அதிசயம் ;

பச்சை, மஞ்சள், சிகப்பு  
என பூமாலைகளை
சமிக்ஞை விளக்குகளாய்
வைத்திருந்தனர் மக்கள் ;

வழக்கம் போல்
அதை யாரும்
மதிக்கவே இல்லை, 
மிதிக்கவே செய்தனர் ;

காணும் இடமெங்கும் 
ஆயிரம் தலைகள் ;
ஆயிரம் தலைகளிடமும் 
ஆயிரம் கலைகள் ;

ஆமை போல் 
நகர்ந்தனர் சிலர் ;
சிறுத்தை போல் 
சீறினர் சிலர் ;

அவரவர் வாயொலிகளை
வைத்தே ஹாரன்களை
எழுப்பினர் பலர் ;

வண்டி அடித்துக் 
கொண்டு யாரும் முன்னேறவில்லை 
முண்டி அடித்துக் 
கொண்டே எல்லாரும் முன்னேறினர் ;

அங்கே 
காவல் இல்லாததால்
ஆவல் மிகுந்தது மக்களுக்கு ;

காணக் காண 
விழியைப்  பிதுங்க 
வைத்தது நெரிசல் ;

முன்னால் சென்றவர்கள் 
பின்னால் வந்தார்கள் ;
பின்னால்  சென்றவர்கள் 
முன்னால் வந்தார்கள் ;

இப்படியே 
சுழற்சி முறையில்
நடந்தது அந்த 
சாலை போக்குவரத்து ;

எனினும் -
எதையுமே அறியாமல் 
அங்கே பிணமாகத்
தூங்கிக் கொண்டிருந்தார் 

இவை எல்லாவற்றுக்கும் 
காரணமான ஒருவர் ; 

1 comment:

  1. நன்று நண்பரே..

    //பச்சை, மஞ்சள், சிகப்பு
    என பூமாலைகளை
    சமிக்ஞை விளக்குகளாய்
    வைத்திருந்தனர் மக்கள் ;

    வழக்கம் போல்
    அதை யாரும்
    மதிக்கவே இல்லை,
    மிதிக்கவே செய்தனர் ;//

    போக்குவரத்து விதிகளின் மீது நமது மக்கள் காட்டும் அலட்சியத்தை சிறப்பாகவே குத்தி காட்டி இருக்கிறீர்கள்..

    ReplyDelete